Thursday, December 19, 2013

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறமாட்டாது!

2016 ஆம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறமாட்டாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரிட்சையினால் பரிட்சையில் தோற்றும் மாணவர்கள் அவர்களுடைய பெற்றோர்கள் ஒருவித உளத்தாக்கத்திற்கு உள்ளாவதாக அண்மையில் ஆய்வு செய்யப்பட்டு இருந்தது அறிந்ததே.
இது தொடர்பாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கல்வியமைச்சின் கீழ் இடம்பெற்றுவரும் செயற்திட்டமான ஆயிரம் பாடசாலை செயற்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டதும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடத்த வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்தார்.

முன் அறிவிப்பு இன்றி ஜில்லா பாடல்களை இன்றே அதிரடியாக வெளியிட்டது ஏன்? திடுக்கிடும் தகவல்கள்.

அரசியல்வாதிகளின் மறைமுக அச்சுறுத்தல் காரணமாக முன் அறிவிப்பின்றி ஜில்லா படத்தின் பாடல்களை திடீரென இன்று வெளியிட்டார் இளைய தளபதி விஜய்.

இன்று விஜய் நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு நல உதவி செய்யும் விழா ஒன்று சென்னை தி.நகர் ஜி.ஆர்.டி ஓட்டலில் நடைபெற்றது. இந்த விழா நடந்து கொண்டிருக்கும்போது, திடீரென இயக்குனர் நேசனும், இசையமைப்பாளர் இமானும் விழாவுக்கு வந்தனர். உடனே விஜய் எழுந்து ஜில்லா படத்தின் பாடல்களை இப்பொழுது நான் வெளியிட நலிவடைந்த ஐந்து தயாரிப்பாளர்கள் பெற்றுக்கொள்வார்கள் என அதிரடியாக அறிவித்து பாடல்கள் கேசட்டை வெளியிட்டார்.

வரும் 21ஆம் தேதி ஜில்லா படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெறும் என தயாரிப்பு தரப்பு அறிவித்திருக்கும்போது திடீரென இன்று வெளியிட்டது ஏன் என்று அனைவருக்கும் பெரும் புதிராக உள்ளது. ஜில்லா படத்துக்கு ஆளும் கட்சியில் இருந்து கண்டிப்பாக தொந்தரவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முதல்கட்டம்தான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த ஜில்லா தயாரிப்பாளர் வீட்டில் நடந்த வருமானவரித்துறை ரெய்டு. மேலும் ஜில்லா படத்தின் இசை வெளியீடு அன்று விஜய் மற்றும் காஜல் அகர்வால் வீடுகளில் ரெய்டு நடத்தி இசை வெளியீட்டு விழாவை நடத்துவதற்கு இடையூறு ஏற்படுத்த இருப்பதாக ஒரு செய்தி விஜய்க்கு வந்ததால் இந்த அதிரடி முடிவு என அவரது தரப்பினர் கூறுகின்றனர்.

நடிகை கார்த்திகாவை பந்தாடும் ஆர்யா, விஜய் சேதுபதி. இயக்குனர் அதிர்ச்சி

 ஆர்யா மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் புறம்போக்கு படத்தில் ஆர்யா, சமூக சேவகராகவும், விஜய் சேதுபதி ரயில்வே ஊழியராகவும் நடிக்கின்றார்களாம். இருவரும் நண்பர்களாக இருந்து பின்னர் ஒரு பெண்ணின் காதலால் மோதிக்கொள்வதுதான் கதை. இந்த கதையில் நாயகியின் வேடத்திற்கு கோ, அன்னக்கொடி ஆகிய படங்களில் நடித்த கார்த்திகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கார்த்திகா யாருக்கு ஜோடி? ஆர்யாவுக்கா? அல்லது விஜய் சேதுபதிக்கா? என்ற சஸ்பென்ஸ் படக்குழுவினரை போட்டு குழப்பியது. ஆர்யாவிடம் இதுகுறித்து கேட்டபோது கார்த்திகா விஜய் சேதுபதிக்குத்தான் ஜோடி எனக்கு ஜோடி இன்னும் முடிவாகவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் விஜய்சேதுபதியோ கார்த்திகாவின் உயரத்திற்கு ஆர்யா தான் சரிப்பட்டு வருவார். எனக்கு வேறொரு ஜோடியை இயக்குனர் இனிமேல்தான் முடிவு செய்வார் என்று கூறியுள்ளார்.

கடைசியாக கார்த்திகா நடித்த படம் படு பிளாப் ஆனதால் இருவருமே அவருடன் ஜோடி விரும்பவில்லையோ என படக்குழுவினர் கிசுகிசுத்தனர். இந்த தகவல் கேட்டு இயக்குனர் அதிர்ச்சி அடைந்துள்ளார். கார்த்திகா இருவருக்குமே ஜோடி இல்லை. அவர் இந்த படத்தில் தனியாகத்தான் நடிக்கிறார் என்று கூறினார். மேலும் இந்த படத்தின் முதல் டீஸர் வரும் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் செய்தியாளர்களிடம் கூறினார்.

2014 ல் இந்தியா உண்மையில் சுதந்திரமடையப்போகிறதா? - சுவாரஸ்யமான செய்தி

67 ஆண்டுகள் கழித்து 1947ம் ஆண்டு போலவே, 2014ம் ஆண்டும் ஒரே மாதிரியான தேதிகளையும், கிழமைகளையும் கொண்டிருப்பதால், இந்தியாவில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்று ஜோசியக்காரர்கள் ஆளாளுக்கு ஆரூடம் கூறிக் கிளம்பியுள்ளனராம். புது வருடம் பிறக்கப் போகிறது என்றாலே கணிப்புகளும் கச்சை கட்டிக் கொண்டு கலகலப்பாக கிளம்பி விடுவது வழக்கம்தான். அந்த வகையில் 2014ம் ஆண்டு எப்படி இருக்கும் என்று இப்போதே பலரும் கணிக்க ஆரம்பித்து விட்டனர். இப்படி நடக்கும், அப்படி நடக்கும், எப்படியும் ஏதாவது நடக்கும் என்ற ரேஞ்சுக்கு கணிப்புகளை எடுத்து மூளையில் திணிக்கும் வேலைகள் மும்முரமாகியுள்ளன.


1947ம் ஆண்டு போலவே, 2014ம் ஆண்டும் இருக்கிறது என்பதுதான் தற்போதைய பரபரப்பு.

1947ம் ஆண்டைப் போலவே, 2014ம் ஆண்டும் புதன்கிழமைதான் பிறக்கிறது. அதாவது இரு ஆண்டுகளிலும் ஜனவரி 1ம் திகதி புதன்கிழமை வருகிறது. மற்ற திகதிகளும், கிழமைகளும் கூட ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.

அதே 1947ம் ஆண்டு காலண்டரை எடுத்துப் பார்த்தால், அப்படியே 2014 ம் ஆண்டு காலண்டர் போலவே இருக்கும். திகதிகளும், கிழமைகளும் ஒரே மாதிரியாக இல்லை.

1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்த ஆண்டு என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். எனவே அதேபோன்ற மாற்றத்தை 2014ம் ஆண்டு இந்தியா மீண்டும் சந்திக்கும் என்று பலர் கணித்துக் கூறியுள்ளனர்.


என் அந்தரங்க பகுதியை எல்லாம் தொட்டு சோதனையிட்டனர் அமெரிக்க காவல்துறையினர்

என் உடைகளை களைந்து என் அந்தரங்க பகுதிகளை தொட்டு சோதனை போட்டனர் அமெரிக்க காவல்துறையினர். என்று அதிர்ச்சி அளித்துள்ளார் தேவயாணி அதாவது, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பணியாற்றும் இந்திய தூதர் தேவயானியை அமெரிக்க போலீசார் கைது செய்ததும், அத்து மீறி நடந்து கொண்ட விதமும் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க போலீஸ் நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்த பின்பு தேவயானி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் நடந்த சம்பவம் பற்றி டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அலுவலகத்துக்கு இ.மெயிலில் உருக்கமான கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

அமெரிக்க போலீசார் என்னை கைது செய்த போது தூதர் என்ற விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. துணைத் தூதர் என்ற அடிப்படையில் எனக்கு தூதரக ரீதியிலான பாதுகாப்பு உள்ளதை கைது செய்த அதிகாரிகளிடம் நான் பல முறை எடுத்துக் கூறினேன். என்றாலும் அவர்கள் தொடர்ந்து என்னை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தினார்கள்.

மீண்டும் மீண்டும் கை விலங்கு மாட்டினார்கள். ஆடைகளை களைந்து சோதனையிட்டனர். உடலின் அந்தரங்க பகுதிகளிலும் சோதனையிட்டனர். டி.என்.ஏ., சோதனைக்காக மாதிரி எடுத்தனர்.

கிரிமினல் குற்றவாளிகளுடனும், போதை பொருள் கடத்தல்காரர்களுடனும் என்னை அடைத்து வைத்தனர். நான் மனம் உடைந்து பல முறை கதறி அழுதும் என்னை விடவில்லை.

இவ்வாறு தேவயானி குறிப்பிட்டுள்ளார்.

Monday, December 2, 2013

இங்கிலாந்து ராணியை மிஞ்சிய சோனியா காந்தி. $2 பில்லியன் சொத்து வந்தது எப்படி? அதிர்ச்சி தகவல்கள்.

உலக அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களின் சொத்து மதிப்பு பட்டியலை The Huffington Post என்ற ஆங்கில பத்திரிகை ஒரு சர்வே எடுத்துள்ளது. இதில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பை இந்தியாவின் சோனியா காந்தி வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சொத்து மதிப்பு இங்கிலாந்ந்து ராணி எலிசபெத்தின் சொத்து மதிப்பைவிட அதிகமானதாகும். ராணியிடம் 500 மில்லியன் டாலர் சொத்து மதிப்பே உள்ளது.

2009ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும்போது வேட்புமனு தாக்கலில் தனக்கு வெறும் 1.38 கோடி ரூபாய் சொத்து மதிப்பு மட்டுமே உள்ளதாக தெரிவித்திருந்த 
சோனியா காந்திக்கு வெரும் நான்கே ஆண்டுகளில் 2பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து வந்தது எப்படி என்று இந்தியாவின் எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு கேள்வி எழுப்புகின்றது. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரும் நிலையில் இந்த தகவல் சோனியா காந்திக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.www.thedipaar.com

Huffington Post சர்வேயின்படி இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ரஷ்ய அதிபர் 
மிளாடிமின்புதின். 12வது இடத்தில் சோனியா காந்தியும், 18வது இடத்தில் இங்கிலாந்து ராணி எலிசபெத் அவர்களும் உள்ளனர்
முதல் 20 இடங்களில் உள்ள உலக அரசியல்வாதிகளின் பெயர்கள்:

1. Vladimir Putin, President of Russia

2. Bhumibol Adulyadej, King of Thailand

3. Hassanal Bolkiah, Sultan of Brunei

4. Abdullah bin Abdul Aziz Al Saud, King of Saudi Arabia

5. Khalifa bin Zayed Al Nahyan, President of the UAE

6. Mohammed bin Rashid Al Maktoum, Emir of Dubai

7. Kim Jong-un, Supreme Leader of North Korea

8. Hans-Adam II, Prince of Liechstenstein

9. Mohammed VI, King of Morocco

10. Sebastian Pinera, President of Chile

11. Hamad bin Khalifa Al Thani, Emir of Qatar

12. Sonia Gandhi, President of India's INC

13. Albert II, Prince of Monaco

14. Qaboos bin Said, Sultan of Oman

15. Teodoro Obiang Nguema Mbasogo, President of Equatorial Guinea

16. Bashar Al-Assad, President of Syria

17. Ilham Aliyev, President of Azerbaijan

18. Elizabeth II, Queen of England

19. Sabah IV Al-Ahmad Al-Jaber Al-Sabah, Sheikh of Kuwait

20. Mswati III, King of Swaziland

போதையில் தள்ளாடும் திரிசாவை கொஞ்சி விளையாடும் நடிகர்கள் -அதிர்ச்சி video

குடிமகளே குடி ..இவங்களுக்குன் எல்லாம் கோயில் வேற கட்டுறாங்க மொக்கு கூட்டம் கீ கீ

7 வருடக் காதலியை கைப்பிடித்தார் 'பிளாக்' பாண்டி

கோலிவுட்டில் வளர்ந்து வரும் காமெடி நடிகரான பிளாக் பாண்டிக்கும், அவரது காதலி உமேஸ்வரி பத்மினிக்கும் சென்னையில் இன்று திருமணம் நடந்தேறியது.
சின்னத்திரை மூலமாக வெள்ளித்திரைக்கு அறிமுகமான பாண்டி அங்காடித் தெரு உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சினிமாவில் வளரும் நகைச்சுவை நடிகராக உருவெடுத்துள்ள அவரும் எம்.பி.ஏ பட்டதாரியான உமேஸ்வரி பத்மினியும் காதலித்து வந்தனர். இந்தக் காதல் இன்று திருமணத்தில் முடிந்தது. இருவரும் 7 வருடமாக காதலித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு வீட்டார் சம்மதத்துடன், இன்று சென்னையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தேறியது. திருமணத்தில் பெரும் திரளானோர், டிவி உலகினர், திரையுலகினர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.


லண்டன் சென்ற நடிகையை பின்தொடர்ந்து தனுஸ், சிம்பு, மற்றெருவர் போட்டி போட்'டுக்கொண்டு சென்றதால் பரபரப்பு!

பிரபல நடிகர்கள் ஓய்வில் இருக்கும்போது வெளிநாட்டுக்கு சுற்றுலா போவது கோலிவுட்டில் சகஜம். அஜீத், விஜய் போன்ற பிரபலங்கள் ஒவ்வொரு படம் முடிந்தவுடன் குடும்பத்துடன் ஏதாவது ஒரு நாட்டிற்கு சென்று ஓய்வு எடுப்பார்கள். ஆனால் தற்போது மூன்று பிரபலங்கள் பிஸியாக இருக்கும் இந்த நேரத்தில் திடீரென லண்டன் சுற்றுப்பயணம் செய்கிறார்கள். இது கோலிவுட்டில் பெரும் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.

அந்த மூன்று பிரபலங்கள் தனுஷ், சிம்பு, மற்றும் அனிருத். தனுஷ் தற்போது வேலையில்லா பட்டாதாரி என்ற படத்திலும், அனேகன் படத்திலும் பிஸியாக உள்ளார். அதேபோல சிம்பு, கவுதம் மேனன் படத்தில் நடிக்க புதிதாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதுபோக நயன் தாராவுடன் பாண்டிராஜ் படத்திலும் ஏற்கனவே அரைகுரையில் உள்ள வாலு, வேட்டை மன்னன் படத்திலும் பிஸியாக உள்ளார். அனிருத்தை பற்றி கேட்கவே வேண்டாம். சாப்பிடக்கூட முடியாத அளவுக்கு அவர் பிஸி. ஆனால் இந்த மூன்று பிசி நடிகர்களும் திடீரென லண்டனுக்கு கிளம்பியுள்ளார்கள். இது கோலிவுட்டை சற்று அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

கோலிவுட்டில் சிலர் அதிர்ச்சியடைய முக்கிய காரணம் என்னவென்றால், தமிழ் சினிமாவை பரபரப்பாக்கிய ஒரு முக்கிய நடிகையின் ஷூட்டிங் லண்டனில் நடந்து கொண்டிருக்கின்றது. அவர் இன்னும் ஒரு மாதம் அங்குதான் தங்கியிருப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த நேரத்தில் மூவரும் லண்டன் கிளம்பியுள்ளதுதான் கோலிவுட்டின் சந்தேகத்திற்கு முக்கிய காரணம். வரும்போது நான்கு பேர்களும் சேர்ந்து வருவார்களோ? என கோலிவுட் சஸ்பென்ஸுடன் எதிர்பார்க்கிறது.