Thursday, December 19, 2013

2014 ல் இந்தியா உண்மையில் சுதந்திரமடையப்போகிறதா? - சுவாரஸ்யமான செய்தி

67 ஆண்டுகள் கழித்து 1947ம் ஆண்டு போலவே, 2014ம் ஆண்டும் ஒரே மாதிரியான தேதிகளையும், கிழமைகளையும் கொண்டிருப்பதால், இந்தியாவில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்று ஜோசியக்காரர்கள் ஆளாளுக்கு ஆரூடம் கூறிக் கிளம்பியுள்ளனராம். புது வருடம் பிறக்கப் போகிறது என்றாலே கணிப்புகளும் கச்சை கட்டிக் கொண்டு கலகலப்பாக கிளம்பி விடுவது வழக்கம்தான். அந்த வகையில் 2014ம் ஆண்டு எப்படி இருக்கும் என்று இப்போதே பலரும் கணிக்க ஆரம்பித்து விட்டனர். இப்படி நடக்கும், அப்படி நடக்கும், எப்படியும் ஏதாவது நடக்கும் என்ற ரேஞ்சுக்கு கணிப்புகளை எடுத்து மூளையில் திணிக்கும் வேலைகள் மும்முரமாகியுள்ளன.


1947ம் ஆண்டு போலவே, 2014ம் ஆண்டும் இருக்கிறது என்பதுதான் தற்போதைய பரபரப்பு.

1947ம் ஆண்டைப் போலவே, 2014ம் ஆண்டும் புதன்கிழமைதான் பிறக்கிறது. அதாவது இரு ஆண்டுகளிலும் ஜனவரி 1ம் திகதி புதன்கிழமை வருகிறது. மற்ற திகதிகளும், கிழமைகளும் கூட ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.

அதே 1947ம் ஆண்டு காலண்டரை எடுத்துப் பார்த்தால், அப்படியே 2014 ம் ஆண்டு காலண்டர் போலவே இருக்கும். திகதிகளும், கிழமைகளும் ஒரே மாதிரியாக இல்லை.

1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்த ஆண்டு என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். எனவே அதேபோன்ற மாற்றத்தை 2014ம் ஆண்டு இந்தியா மீண்டும் சந்திக்கும் என்று பலர் கணித்துக் கூறியுள்ளனர்.


0 comments:

Post a Comment