அரசியல்வாதிகளின் மறைமுக அச்சுறுத்தல் காரணமாக முன் அறிவிப்பின்றி ஜில்லா படத்தின் பாடல்களை திடீரென இன்று வெளியிட்டார் இளைய தளபதி விஜய்.
இன்று விஜய் நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு நல உதவி செய்யும் விழா ஒன்று சென்னை தி.நகர் ஜி.ஆர்.டி ஓட்டலில் நடைபெற்றது. இந்த விழா நடந்து கொண்டிருக்கும்போது, திடீரென இயக்குனர் நேசனும், இசையமைப்பாளர் இமானும் விழாவுக்கு வந்தனர். உடனே விஜய் எழுந்து ஜில்லா படத்தின் பாடல்களை இப்பொழுது நான் வெளியிட நலிவடைந்த ஐந்து தயாரிப்பாளர்கள் பெற்றுக்கொள்வார்கள் என அதிரடியாக அறிவித்து பாடல்கள் கேசட்டை வெளியிட்டார்.
வரும் 21ஆம் தேதி ஜில்லா படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெறும் என தயாரிப்பு தரப்பு அறிவித்திருக்கும்போது திடீரென இன்று வெளியிட்டது ஏன் என்று அனைவருக்கும் பெரும் புதிராக உள்ளது. ஜில்லா படத்துக்கு ஆளும் கட்சியில் இருந்து கண்டிப்பாக தொந்தரவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முதல்கட்டம்தான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த ஜில்லா தயாரிப்பாளர் வீட்டில் நடந்த வருமானவரித்துறை ரெய்டு. மேலும் ஜில்லா படத்தின் இசை வெளியீடு அன்று விஜய் மற்றும் காஜல் அகர்வால் வீடுகளில் ரெய்டு நடத்தி இசை வெளியீட்டு விழாவை நடத்துவதற்கு இடையூறு ஏற்படுத்த இருப்பதாக ஒரு செய்தி விஜய்க்கு வந்ததால் இந்த அதிரடி முடிவு என அவரது தரப்பினர் கூறுகின்றனர்.
0 comments:
Post a Comment