என் உடைகளை களைந்து என் அந்தரங்க பகுதிகளை தொட்டு சோதனை போட்டனர் அமெரிக்க காவல்துறையினர். என்று அதிர்ச்சி அளித்துள்ளார் தேவயாணி அதாவது, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பணியாற்றும் இந்திய தூதர் தேவயானியை அமெரிக்க போலீசார் கைது செய்ததும், அத்து மீறி நடந்து கொண்ட விதமும் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க போலீஸ் நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்த பின்பு தேவயானி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் நடந்த சம்பவம் பற்றி டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அலுவலகத்துக்கு இ.மெயிலில் உருக்கமான கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
அமெரிக்க போலீசார் என்னை கைது செய்த போது தூதர் என்ற விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. துணைத் தூதர் என்ற அடிப்படையில் எனக்கு தூதரக ரீதியிலான பாதுகாப்பு உள்ளதை கைது செய்த அதிகாரிகளிடம் நான் பல முறை எடுத்துக் கூறினேன். என்றாலும் அவர்கள் தொடர்ந்து என்னை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தினார்கள்.
மீண்டும் மீண்டும் கை விலங்கு மாட்டினார்கள். ஆடைகளை களைந்து சோதனையிட்டனர். உடலின் அந்தரங்க பகுதிகளிலும் சோதனையிட்டனர். டி.என்.ஏ., சோதனைக்காக மாதிரி எடுத்தனர்.
கிரிமினல் குற்றவாளிகளுடனும், போதை பொருள் கடத்தல்காரர்களுடனும் என்னை அடைத்து வைத்தனர். நான் மனம் உடைந்து பல முறை கதறி அழுதும் என்னை விடவில்லை.
இவ்வாறு தேவயானி குறிப்பிட்டுள்ளார்.
1 comments:
idhu vidhi'in vilaiyaattaaga kooda irukkalaam...
http://meendumjeenoo.blogspot.in/2013/12/ii.html
Post a Comment