Monday, October 28, 2013

விஜய், அனிருத் சேர்ந்து பாடும் அதிரடி சூப் சாங். நஸ்ரியா அதிர்ச்சி

ஜில்லா படத்தை அடுத்து விஜய் நடிக்கும் அதிரடி படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிகிறார். அனிருத் 3, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை என்ற மூன்று ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்துள்ளதால், விஜய் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

படத்தில் அனிருத் ஆறு பாடல்களுக்கு டியூன் போட்டு ஏ.ஆர்.முருகதாஸிடம் அனுமதி பெற்றுள்ளார். இதில் ஒரு பாடலை விஜய் பாடுவார் என கூறப்படுகிறது. துப்பாக்கி, ஜில்லா படத்தை அடுத்து அதிரடி படத்திலும் விஜய் பாடுவது உறுதியாகியுள்ளது.

விஜய்யுடன் அனிருத்தும் சேர்ந்து பாடுவதாக இந்த பாடல் அமைந்துள்ளது.  அடுத்த வருடம் மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். இன்னொரு கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த வேடத்திற்கு முதலில் நஸ்ரியாதான் பரிசீலனையில் இருந்தார். ஆனால் தொப்புள் விவகாரத்தால் அவர் நீக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த வாய்ப்பை இழந்ததால் நஸ்ரியா அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment