இங்கிலாந்து இளவரசி டயானாவின் ரகசிய செக்ஸ் டைரியில் எழுதப்பட்டிருந்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவருடைய காதலர்கள் பற்றி அவருடைய தோழி சிமோன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து இளவரசி டயானா தனது காதலர் தோதி ஃபயீதுடன் பாரீஸில் காரில் சென்றபோது விபத்தில் சிக்கி பலியானார்.
இந்நிலையில் டயானாவின் காதலர்கள் குறித்து அவருக்கு நெருக்கமான தோழியாக இருந்த சிமோன் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார். டயானாவின் காதல் வாழ்க்கை பற்றி சிமோன் தெரிவித்துள்ளார்.
தனது மகன்களான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரிக்கு குதிரையேற்ற பயிற்சி அளித்த குதிரையேற்ற வீரர் ஜேம்ஸ் ஹெவிட்டுடன் டயானா உறவு கொண்டுள்ளார் என்று சிமோன் தெரிவித்தார்.
இஸ்லாமிய கலை நிபுணரான ஆலிவர் ஹோயருடன் டயானாவுக்கு தொடர்பு இருந்தது. டயானாவுக்கு டாக்டர் ஹஸனத் கானுடனான உறவு உடல் உறவின் அடிப்படையிலானது அல்ல. அவர்களிடையே நெருங்கிய நட்பு இருந்தது என்றார் சிமோன்.
டயானா ராஜ குடும்பத்தாரின் தனிபட்ட விஷயங்கள் பற்றி டைரி ஒன்றில் எழுதி வைத்திருந்திருக்கிறார். அதில் இளவரசர் சார்லஸுக்கு படுக்கையில் என்ன பிடிக்கும், எந்தெந்த பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்தது, ராஜ குடும்பத்தின் மூத்த உறுப்பினரும், ஆண் வேலைக்காரரும் படுக்கையில் இருந்தபோது கையும் களவுமாக சிக்கியது உள்ளிட்ட பரபரப்பு தகவல்களை எழுதி வைத்துள்ளார் டயானா. இந்த டைரியால் கூட டயானா கொல்லப்பட்டிருக்கலாம் என்று எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment