Monday, October 28, 2013

நஸ்ரியாவை பார்த்து கிண்டலடித்த நயன்தாரா

ரொம்ப சீக்கிரம் வாய்ப்பு கெடச்சு அதே வேகத்துல மேல போயி சர்ருனு கீழ இறங்குனவங்க நஸ்ரியா. நேரம் படத்துல நல்ல பேரு, ராஜா ராணில நாட்டி பொண்ணுனு ரொம்ப ஈசியா சினிமா ரசிகர்கள் கிட்ட ரீச்சானாங்க , ஆங்… ஹீரோக்கள், டைரக்டர்கள் மனசுல கூட இடம் பிடிச்சாங்க.நய்யாண்டி பட ஹாட் மேட்டருதான் இவுங்க கெரியர புரட்டி போட்டுச்சு. இவுங்கள சின்ன நயன்தாரனு கூப்ட ஆரம்பிச்சதுல செம கடுப்புல இருந்த நயன் உள்ளிட்ட பல ஹீரோயின்கள் இப்போ பார்டியே வெச்சு கொண்டாடிட்டு இருக்காங்கலாம்.
சமீபத்துல இந்த சர்ச்சைய பத்தி அக்கா நயன் கிட்ட கேட்டதுக்கு கிளாமர்ங்கறது சினிமால ஒரு பகுதி, அத கையில எடுக்காம எந்த ஹீரோயினும் இங்க நிக்க முடியாது. இது தெரிஞ்சும் உள்ள வந்துட்டு இப்போ கிளாமர் காட்ட மாட்டேனு சொல்றது, அதுக்காக சர்ச்சையில சிக்குறது இதெல்லாம் வேடிக்கையா இருக்குனு சொல்லியிருக்காங்க(மொத்தத்துல சின்ன புள்ளத்தனமா இருக்குனு சொல்றீங்க).

0 comments:

Post a Comment