நடிகை காஜல் அகர்வால் நடிப்புக்கு முழுக்குப் போடவிருப்பதாக திடீரென கிளப்பிவிட்டுள்ளன ஆந்திர மீடியாக்கள். நடிகை காஜல் அகர்வால் தெலுங்கில்தான் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தார்.
அதுவும் மகதீராவுக்குப் பிறகு அவரது மவுசு எங்கேயோ போய்விட்டது. சினிமாவை விட்டு விலகுகிறாரா காஜல் அகர்வால்? காஜல் அகர்வால் ஆனால் இப்போது பார்த்தால் தெலுங்கில் காஜலுக்கு சுத்தமாக பட வாய்ப்புகளே இல்லை. யவடு என்ற படத்தில் மட்டும் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். அதுவும் விரைவில் ரிலீசாகப் போகிறது.
தெலுங்கில் புதுப்பட வாய்ப்புகள் வந்தாலும் வேண்டாம் என மறுக்கும் காஜல், இப்போது ஜில்லா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதன் பிறகு தமிழில் வேறு எந்தப் படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. எனவே அவர் சினிமாவை விட்டு விலக போகிறார் என்று செய்தி கிளம்பியுள்ளது.
காஜல்அகர்வால் தங்கை நிஷாவுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியுள்ளது. எனவே காஜல்அகர்வாலும் விரைவில் திருமணம் செய்துகொள்வார் என்றும், இதற்காகவே பட வாய்ப்புகளை அவர் தவிர்ப்பதாகவும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment