இயக்குநர் டி.ராஜேந்தருக்கு சிலம்பரசன், குறளரசன் என்ற 2 மகன்களும், இலக்கியா என்ற மகளும் இருக்கிறார்கள். மூத்த மகன் சிலம்பரசனை, உறவைக்காத்த கிளி என்ற படத்தில் 6 மாத குழந்தையாக அறிமுகம் செய்தார். சில வருடங்கள் கழித்து, காதல் அழிவதில்லை என்ற படத்தில் சிலம்பரசனை கதாநாயகனாக அறிமுகம் செய்தார்.
குறளரசன் இசையமைப்பாளராக ஒரு படத்தில் அறிமுகம் ஆகிறார். அந்த படத்தில், அவருடைய அண்ணன் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கிறார். பசங்க,மெரினா படங்களை டைரக்டு செய்த பாண்டிராஜ் டைரக்டு செய்கிறார்.
குறளரசன், அவருடைய அப்பா டி.ராஜேந்தரிடம் இசையமைப்பாளருக்கான பயிற்சி பெற்றவர். முறைப்படி, சங்கீதமும் கற்று இருக்கிறார். இவர் இசையமைப்பாளராக அறிமுகமாகும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. படப்பிடிப்பு சென்னை ஊரப்பாக்கத்தில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது.
0 comments:
Post a Comment