Monday, October 28, 2013

காதலியை இழுத்துக்கொண்டு ஓடிய ஹீரோ

உயிருக்கு உயிரா காதலிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிக்க நினச்ச ஹீரோ ஃப்ரண்ட்ஸ் உதவியோட ஊர விட்டு ஓடுறாரு. அவங்க ஓடிப்போய் சேர்ற இடம்தான் ஊட்டி, ஃப்ரண்ட்ஸ் நம்மல சேர்த்து வெச்சுடுவாங்க இனிமே எல்லாம் நல்லதா நடக்கும்னு நிம்மதியா இருந்த ஹீரோ, ஹீரோயின் வாழ்க்கையில் திடீர் திடீர்னு ஏதோ மர்மமான விஷயங்கள்லா நடக்குது.கூடவே போன் மிரட்டல்கள் வேற.
சுற்றுலா திரைப்படம்
சுற்றுலா திரைப்படம்
உதவி பண்ண வந்த ஃப்ரண்ட்ஸும் மாயமாகுறாங்க. இப்புடி ஒரு இக்கட்டான சூழல்ல ஹீரோ, ஹீரோயின் சேர்ந்தாங்களா, காணாம போன ஃப்ரண்ட்ஸ் அம்புட்டாங்கலாங்கறதுதான் சுற்றுலா படத்தோட கதை களம்.(கதைய டைரக்டரு கிட்டயே சினிமா பட்சி கேட்ருக்கு).
‘சுற்றுலா’, பர்பிள் விஷன் சார்பா எம்.ரவிக்குமார், வி. வெங்கட் ராமன் தயாரிப்புல கதை, திரைக்கதை, வசனம், எழுதி டைரக்ஷன் பண்றாரு வி.ராஜேஷ் ஆல்பர்ட் மியூசிக் பரணி. ஹீரோவா மிதுன், ஹீரோயினா ஸ்ரீஜி, ரிச்சர்டு ஒரு முக்கிய பாத்திரத்த சுமக்குறாரு.

0 comments:

Post a Comment