Monday, November 25, 2013

ரஜினி அனுமதியுடன் சூர்யா நடிக்கும் பாட்ஷா 2

சூர்யா நடிப்பில் லிங்குசாமி தயாரித்து இயக்கும் படத்தின் கதை பாட்ஷா டைப் கதை போன்றது என தற்போது படக்குழுவினர் தகவல்களை கசியவிட்டுள்ளனர்.
இந்த படத்திற்கு பாட்ஷா 2 என்று சப் டைட்டில் வைக்கவும் முடிவு செய்துள்ளனர்.பாட்ஷா படம் போலவே கதையின் ஒருபகுதி மும்பையிலும், மற்றொரு பகுதி சென்னையில் நடைபெறும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு வெவ்வேறு கேரக்டர்களில் சூர்யா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.
இந்த படத்தின் ஒளிப்பதிவு செய்வது சந்தோஷ் சிவன். மேலும் இந்த படத்தில் மனோஜ் பாஜ்பாய், வித்யூத் ஜம்வால், மற்றும் ராஜ்பால் யாதவ் ஆகியோரும் நடிக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜாவின் இசைக்கு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.
இந்த படத்திற்கு பாட்ஷா 2 டைட்டில் வைக்க ரஜினியிடமும், சத்யா மூவீஸிடமும் பேசி அனுமதி வாங்கிவிட்டார் லிங்குசாமி. ஆனாலும் அதை சப்டைட்டிலாகத்தான் உபயோகிக்க முடிவு செய்துள்ளார். தமிழின் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்று ரஜினியின் பாட்ஷா. அந்த படத்தை போல சூர்யாவுக்கு இது கைகொடுக்குமா?

0 comments:

Post a Comment