Thursday, November 7, 2013

உங்கள் பெயர் போட்டு சச்சினின் ஆட்டோகிராப் வேணுமா..?: இதை படிங்க

சச்சின் டெண்டுல்கரின் ஆட்டோகிராப் அதுவும் உங்கள் பெயர் போட்டு வேண்டுமா? லிட்டில் மாஸ்டர் சச்சின் இந்த மாதத்தோடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவர் விளையாடும் 199 மற்றும் 200வது டெஸ்ட் போட்டிகளை காண உலக அளவில் உள்ள அவரது ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால் அவர் விளையாடும் கொல்கத்தா மற்றும் மும்பை ஸ்டேடியங்களில் ரசிகர்களுக்கு போதுமான டிக்கெட் கிடைப்பது தான் அரிதாக உள்ளது. இந்நிலையில் சச்சின் ரசிகர்களை குஷிப்படுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சச்சின் டெண்டுல்கரின் வாசகங்கள் மற்றும் அவருடைய ஆட்டோகிராபுடன் கூடிய போட்டோவை ஆன்லைனில் அவரது ரசிகர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அளிக்கிறது. இதில் விசேஷம் என்னவென்றால் அந்த ஆட்டோகிராபில் உங்கள் பெயர் இருக்கும்.

எனக்கு ஒரு ஆட்டோகிராப் இந்த ஆன்லைன் ஆட்டோகிராபை பெற
http://services.digigraph.me/sign/ef4f1b6bacdf06820acfe5cb9fe43a8b7bc263bae35d5c5984a41dd91a4816fb402a714120bf14871f114ebbef144eb74fa4816e7c7e11a0da285c88ae94cc85bd868c9c3019a23fab426337498078c5f32e3f512ea162ace0bd78d085de16dcஎன்ற இணையதளத்திற்கு செல்லவும்.


இணையதள லிங்கை கிளிக் செய்தவுடன் வரும் பக்கத்தின் கீழே "Personalize Your Photo" என்ற ஒன்று இருக்கும். அதை கிளிக் செய்யவும். அதை கிளிக் செய்தால் வரும் பக்கத்தில் உங்கள் பெயர் கேட்கும். அந்த பகுதியில் உங்கள் பெயரை டைப் செய்து 'continue' பட்டனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தால் உங்கள் பெயருடன் கூடிய ஆட்டோகிராப் வரும்.



நடிகர் ஜீவா சச்சினின் ஆன்லைன் ஆட்டோகிராபை வாங்கியுள்ளார். தன்னை போன்று ஆட்டோகிராப் வாங்க விரும்புபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment