தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகரும், தயாரிப்பாளருமான பிரகாஷ் ராஜ் மலையாள திரைப்பட உரிமையை வாங்கியுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் தனது டூயட் மூவிஸ் மூலமாக ரசிகர்களுக்கு சிறந்த திரைப்படங்களை தந்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ்.
இவர் சமீபத்தில் கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மலையாளத்தில் வெற்றி பெற்ற சால்ட் அண்ட் பெப்பர்(Salt and Papper) திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார்.
இதற்கு முன்பு பிரகாஷ் ராஜ், தெலுங்கில் வெற்றி பெற்ற ஹேப்பி டேஸ்(Happy Days) திரைப்படத்தை தமிழில் இனிது இனிது திரைப்படமாக எடுத்துள்ளார். தமிழில் பரவலாக பேசப்பட்ட அபியும் நானும் திரைப்படத்தை கன்னடத்தில் இயக்கியுள்ளார்.
தற்பொழுது தமிழில் பிரகாஷ் ராஜ் இயக்கிய டோனி என்ற திரைப்படம் அடுத்த வருடம் 2012 ம் ஆண்டு திரையிடப்படவுள்ளது. சால்ட் அண்ட் பெப்பர் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரகாஷ் ராஜ் நடிக்க யோசித்து வருகிறார் என்று கொலிவுட் தகவல் தெரிவிக்கின்றன
0 comments:
Post a Comment