Sunday, November 24, 2013

நரேந்திர மோடிக்கு திடீர் ஆதரவு கொடுக்கும் நமீதா, மல்லிகா ஷெராவத். காங்கிரஸ் அதிர்ச்சி

நரேந்திர மோடியும் நானும் ஒரே ஊரு…. குஜராத்! ஆனால் நான் எந்த கட்சியில் சேர்றதுன்னு குழப்பமா இருக்கு. பட், பி.ஜே.பி மேல எனக்கொரு கிரேஸ் இருக்கு. எங்க ஊரை மோடி எவ்வளவு சுத்தமாக வச்சுருக்கார் தெரியுமா என்றெல்லாம் அவ்வப்போது ஃபீல் ஆகும் நமீதா, வருகிற பாராளுமன்ற தேர்தலுக்குள் அந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொள்வார் போல தெரிகிறது.

தென்னாட்டின் மல்லிகா ஷெராவத்தான நமீதாவின் ஆசை இப்படியிருக்க, வடநாட்டின் நமீதாவான மல்லிகா ஷெராவத்தின் ஆசை எப்படியிருக்கிறது? அவருக்கும் மோடியை பிரதமராக முன்னிருத்தும் பி.ஜே.பி யை ஆதரிக்க முடிவெடுத்திருக்கிறாராம். இதற்கிடையில் அவர் பேட்டியில் பகிரங்கமாக ராகுல் காந்தியையும், நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ராகுல் மீது எனக்கு பெரிசா அபிப்ராயம் இல்ல. ஆனால் என் ஷோவுக்கு நரேந்திர மோடி வந்தால் அதுதான் என்னுடைய பெருமை என்று கூறியிருக்கிறார். ஆமாம்… இவர் என்ன ஷோ பண்ணப் போகிறாராம். சேனல் மூலம் தனக்கு மாப்பிள்ளை தேடப் போகிறாராம்.
நமீதா, மல்லிகா ஷெராவத் ஆகிய இரண்டு கவர்ச்சி நடிகைகளும் ஒரே நேரத்தில் நரேந்திரமோடிக்கு ஆதரவு கொடுத்துள்ளதால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது. கோலிவுட், பாலிவுட் என அனைத்திலும் நரேந்திரமோடிக்கும் ஆதரவு பெருகி வருவதால் காங்கிரஸ் கட்சியும் தங்களுக்கு ஆதரவு கொடுக்கும் கவர்ச்சி நடிகைகளை தேடி வருகின்றனர். முதல்கட்டமாக இதில் சிக்கியிருப்பவர் விஜயசாந்திதான்.


0 comments:

Post a Comment