Tuesday, November 19, 2013

தனியாக விட்டில் இருக்கும் போது தாக்கமுயன்ற மர்ம ஆசாமி – அதிர்ச்சியில் ஸ்ருதிஹாசன்

 நடிகை சுருதிஹாசன் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென்று தாக்க முற்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பையில் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் நடிகை சுருதிஹாசன் தங்கியுள்ளார். இந்தநிலையில் வெளியே சென்று விட்டு செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு வந்த சுருதிஹாசனை பின்தொடர்ந்த வந்த ஒரு நபர், அவரது வீட்டுக்குள் நுழைய முயன்றுள்ளார்.

அப்போது இதனை அறிந்த சுருதிஹாசனை அந்த நபர் தாக்க முற்பட்டுள்ளார். அப்போது சுதாரித்த சுருதிஹாசன் மர்ம நபரின் தாக்குதலை தடுத்து பதிலுக்கு  தாக்கியுள்ளார். இதனை எதிர்பாராத அந்த நபர் தப்பி ஓடியுள்ளார். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

செக்யூரிட்டி பாதுகாப்பையும் மீறி, கண்காணிப்பு கேமரா உள்ள அப்பார்ட்மெண்ட்டில் எப்படி இந்த நபர் உள்ளே புகுந்தார் என அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

எனினும் இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்படவில்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இது குறித்து சுருதிஹாசனின் செய்தி தொடர்பாளர் பேசுகையில், இதுவரை சுருதி போலீசில் புகார் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும், இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக கூறினார்.

0 comments:

Post a Comment