Wednesday, November 6, 2013

தமன்னாவிற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறும் ஹீரோக்கள். அதிர்ச்சியில் திரையுலகம்(video)

நடனத்தின் மீது தமன்னாவுக்கு ஆர்வம் மிகுதி. நடன மாஸ்டர்கள் சொல்லிக்கொடுக்கும் எத்தனை கடினமான மூவ்மென்டாக இருந்தாலும் அதை ஒரே டேக்கில் ஓ.கே செய்யக்கூடிய அளவுக்கு நடனத்தில் திறமை வாய்ந்தவர். அதனால்தான் தில்லாலங்கடி, பையா உள்ளிட்ட பல படங்களில் தமன்னாவின் நடனத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக, படத்தின் ஹீரோக்களே தமன்னாவுக்கு இணையாக நடனமாட முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார்களாம். இது தமிழில் மட்டுமல்ல; ஆந்திராவிலும் நடக்கிறதாம். தற்போது இரண்டாவது சுற்றில் அதிரடி பிரவேசம் மேற்கொண்டிருக்கும் தமன்னா, முதல் ரவுண்டை விட இப்போது அதிரடி அட்டாக் கொடுத்து வருவதால் சில ஹீரோக்கள் பாடல் காட்சியென்றாலே நடுங்கிக்கொண்டே ஸ்பாட்டுக்கு வருகிறார்களாம்.
குறிப்பாக சில நரைமுடி ஹீரோக்களோ, தமன்னாவின் அதிரவேட்டுக்கு தங்களால் ஈடுகொடுக்க முடியாது என்பதால், நடன மாஸ்டர்களை அழைத்து, தமன்னாவை மனதில் கொண்டு கம்போஸ் செய்ய வேண்டாம். என்னால் எந்த அளவுக்கு மூவ்மெண்ட் கொடுக்க முடியுமோ அதை மைண்டில் வைத்து கம்போஸ் செய்யுங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்களாம்.
இப்படி சில ஹீரோக்கள் தனது நடனத்தை கண்டு அலறுவதால் தனது முழு நடனத் திறமையையும் வெளிப்படுத்த முடியவில்லை என்று சம்பந்தப்பட்ட பட டைரக்டர்களிடம் பீல் பண்ணுகிறாராம் தமன்னா.

0 comments:

Post a Comment