முதல்வர், வைபவம் ஒன்றிற்கு சென்று இரவு 10 மணியளவில் வீடு திரும்பும்போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த சமயத்தில் கடற்கரை வீதி வழியாக மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸ் வாகனத்துடன் மோதியது. பின்னர் முதல்வரின் வாகனத்துடன் அசுர வேத்தில் மோதியுள்ளது. இதனால் அப்பிதேசத்தில் சிறிது நேரம் பதட்டம் நிலவியது.
இத்தாக்குதல் சம்பவத்தில் முதல்வருக்கு பாதுகாப்பிற்கு வந்த பொலிசார் ஒருவர் பலத்த காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதல் சம்பவத்தில் முதலமைச்சர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அருணாசலம் தெருவில் வசித்து வந்த முபாரக்அலி என்பவர் தான், போதையில் காரை ஓட்டி வந்து பாண்டிச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் கார் மீது மோதியது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் பர்மா பஜாரில் சொந்தமாக செல்போன் கடை வைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து போதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் முபாரக் அலியை கைது செய்தனர்.
0 comments:
Post a Comment