Sunday, November 24, 2013

உங்கள் அபிமான 'ஊதாகலரு ரிப்பன்' ஸ்ரீ திவ்யா பாடகியாகிறார்..!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துல நடிச்சாலும் நடிச்சார், ஸ்ரீ திவ்யாவுக்கு வருத்தமே இல்ல பா. அடுத்தடுத்து ஏராளமான பட வாய்ப்புக்கள்! அதிலும், ஜீ.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து நடிக்கும் “பென்சில்” படத்துக்கு அதிக எதிர்பார்ப்புக்கள். அதுபோக விரதீர சூரன், ஈட்டி போன்ற படங்களிலும் நடிக்கிறார் என்று சொல்லியிருந்தோம் அல்லவா? இப்போ லேட்டஸ் நியூஸ் என்னவென்றால், ஈட்டி படத்தில் பாடுகிறாராம் ஸ்ரீ திவ்யா.

இப்படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தில் மொத்தம் ஐந்து பாடல்களாம். அதில் நான்குபாடலை கம்போஸ் செய்துவிட்டார்களாம். இரண்டு பாடல்கள் ஒலிப்பதிவும் செய்தாகிவிட்டதாம்! இது ஒரு ஆக்‌ஷன், த்ரில்லர் மூவி என்கிறார்கள். அத்தோடு இது ஒரு ஸ்போர்ட்ஸ் சப்ஜெக்ட் படமாம்!

ஆடுகளம் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவியளராக இருந்த ரவி அரசு இப்படத்தை இயக்குகிறார். நமக்கு அதெல்லாம் முக்கியம் இல்லப்பா! ஸ்ரீதிவ்யா பாட்டு எப்போ ரிலீஸ் ஆகும்? என்கிறீர்களா? அதுவும் சரிதான்!

0 comments:

Post a Comment