Sunday, November 24, 2013

தனுஷுடன் ஜோடி சேரும் கமலின் இரண்டாவது பெண்.

நடிகர் தனுஷ் இந்தியில் அறிமுகமான படமான ராஞ்சனா வெற்றிப்படமாக அமைந்ததால், தற்போது தனுஷைத் தேடி மிகப்பெரிய பட வாய்ப்பு ஒன்று வந்துள்ளது.
சீனி கம், பா போன்ற படங்களில் அமிதாப்பை இயக்கிய ஆர்.பால்கி, அடுத்ததாக தான் இயக்கவிருக்கும் படத்திற்காக தனுஷை அழைத்திருக்கிறாராம்.
அமிதாப்பும், ஷாருக்கும் நடிக்கவிருந்த இப்படத்தில், ஷாருக்கிற்குப் பதிலாக தற்போது தனுஷை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.
மேலும் கமலின் இரண்டாவது மகளான அக்ஷரா ஹாசன் இப்படத்தின் மூலம் தனுசின் ஜோடியாக திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார்.
பால்கியின் இயக்கம், அமிதாப்புடன் நடிக்கும் வாய்ப்பு, கமலின் இன்னொரு மகளுடனும் ஜோடியாகவிருக்கும் சந்தோஷம் என ஒரே படத்தில் இப்படி இத்தனை விடயங்களும் தனக்குக் கிடைத்த மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய் இருக்கிறாராம் தனுஷ்.

0 comments:

Post a Comment