Thursday, November 7, 2013

அஜீத்தின் ஆரம்பம் வசூல் ரூ.50 கோடியை தாண்டிடுச்சாமே..?

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்த ஆரம்பம் படம் ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டதாம். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்த ஆரம்பம் படம் கடந்த 31ம் தேதி ரிலீஸ் ஆனது. படம் தமிழகத்தில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நன்றாக ஓடுகிறது. இந்நிலையில் ஆரம்பம் படம் இதுவரை வசூல் செய்துள்ள தொகை பற்றி பார்ப்போம்.

ஆரம்பம் சென்னை பாக்ஸ் ஆபீஸில் முதல் இடத்தை பிடித்துள்ளது. சென்னையில் மட்டும் ரூ.7.20 கோடி வசூலித்துள்ளது.

ஆரம்பம் தமிழகம் முழுவதும் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாம். வெளிநாட்டு வசூலையும் சேர்த்து அஜீத் படத்தின் வசூல் ரூ. 50 கோடியை தாண்டியுள்ளதாம்.

கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகு ராஜா அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. இதனால் வசூலும் கொஞ்சம் டல்லடித்துள்ளது.

ஆரம்பம் படம் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏராளமான ஸ்கிரீன்களில் ஆரம்பம் ரிலீஸாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment