Thursday, November 7, 2013

சூடு பிடிக்கும் ஜில்லா.

பொங்கல் வெளியீடு என்று அறிவித்துவிட்ட நிலையில் சூடு பிடித்துள்ளது ஜில்லா. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் நேசன் இயக்கும் திரைப்படம் ஜில்லா. விஜய், மோகன் லால், காஜல் அகர்வால் என்று நட்சத்திர கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்படம் தொடங்கிய நாளிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட முடிவு செய்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. சமீபத்தில்தான் இப்படத்தின் பர்ஸ்ட் போஸ்டரே வெளியானது. ஆனால் அதற்குள்ளாகவே ஜில்லா படத்தை வாங்கி வெளியிடுவதில் வினியோகஸ்தர்கள் மத்தியில் போட்டி உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சி, கோவை போன்ற ஏரியாவில் பெரும் விலைக்கு விற்பனை ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான ஆரம்பம் படத்தின் வினியோக உரிமையை வாங்கிய அதே வினியோகஸ்தர்தான் ஜில்லா படத்தின் கோவை வெளியீட்டு உரிமையையும் பெரிய விலை கொடுத்து வாங்கியிருக்கிறாராம்.

0 comments:

Post a Comment