விஜய்யுடன் அசின் நடித்த போக்கிரி, சிவகாசி, காவலன் போன்ற அனைத்து படங்களும் ஹிட்தான். அந்த செண்டிமெண்டில்தான் காவலன் படத்தை அடுத்து துப்பாக்கி படத்தில் நடிக்க முதலில் அசினைத்தான் விஜய்யும், ஏ.ஆர்.முருகதாஸும் அணுகினர். ஆனால் அப்போது பாலிவுட்டில் அசின் பிசியாக இருந்ததால் தற்போது கால்ஷீட் இல்லை இரண்டு வருடங்களுக்கு பிறகு பார்க்கலாம் என்று அசால்ட்டாக கூறிவிட்டார். இதனால் கடுப்பான விஜய், பின்னர் காஜல் அகர்வாலை ஹீரோயின் ஆக்கினார். அந்த படம் பயங்கர ஹிட்.
தற்போது அசின் பாலிவுட்டிலும், படமில்லாமல் வெட்டியாக இருக்கிறார். இந்த நேரத்தில் தன் பழைய உறவை புதுப்பிக்க விஜய்யிடம் ஜோடியாக நடிக்க சான்ஸ் கேட்டுள்ளார் அசின். இம்முறை விஜய் இனிமேல் உன்கூட நடிக்கிற ஐடியா கொஞ்சம்கூட இல்லை. பேசாமல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகு என்று அவர் முன்பு கூறிய பதிலுக்கு பழிவாங்கிவிட்டாராம்.
எனவே பயங்கர அப்செட்டில் இருக்கிறார் அசின். வீட்டிலும் திருமணம் செய்துகொள்ள நிர்ப்பந்தித்து வருகிறார்கள். கூடியவிரையில் அசினின் திருமண செய்தியை அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
0 comments:
Post a Comment